போட்டியின் இடையில் விலகிய அஷ்வின்.. மாற்று வீரருக்கு அனுமதி இருக்கா?.. இந்திய அணிக்கு தொடரும் சோதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகின்றது.

போட்டியின் இடையில் விலகிய அஷ்வின்.. மாற்று வீரருக்கு அனுமதி இருக்கா?.. இந்திய அணிக்கு தொடரும் சோதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகின்றது.

தொடருக்கான இந்திய அணி அறிவிப்பின்போதே முகமது சமி காயத்தின் காரணமாக இடம் பெறவில்லை. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.

முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விலகிய விராட் கோலி, அடுத்து ஒட்டுமொத்தமாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இருந்து விலகி விட்டார்.

தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, கேஎல்.ராகுல் என்று விலகிய வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இந்த டெஸ்ட் தொடர் இருக்கும் பொழுது, இது இந்திய அணிக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

முன்னாதாக விலகிய வீரர்கள், போட்டிக்கு முன்பாகவே அணியை விட்டு சென்றதால், மாற்று வீரர்களை வைத்து ஏதாவது சமாளிக்க முடிந்தது.

அஸ்வின் விலகளுக்கு இதுதான் காரணம்... பிசிசிஐயின் ரகசியத்தை லீக் செய்த ராஜீவ் சுக்லா! 

ஆனால் மூன்றாவது டெஸ்டில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் அவசர மருத்துவ சூழ்நிலை காரணமாக, போட்டியில் பாதியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் மிகவும் வலிமையான இடத்தில் இருக்கிறது. இன்று தொடர்ந்து பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த, நிச்சயம் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேவை என்ற நிலையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடந்திருக்கிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக ஃபீல்டிங்கில் மட்டுமே மாற்று வீரரை கொண்டு வர முடியும் என்பதுடன், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கொண்டுவர முடியாது என்ற நிலை உள்ளது.

அவ்வாறு செய்ய ஐசிசி விதியில் இடமில்லை என்பதால், இந்தப் போட்டியில் இந்திய அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...