ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மா இல்லை.. இந்த நடிகை.. யார் தெரியுமா?
நடிகை ஜோதிகா, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சினிமாவில் தனது செகென்ட் இன்னிங்சில் பட்டையை கிளப்பி வருகிறார்.

நடிகை ஜோதிகா, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சினிமாவில் தனது செகென்ட் இன்னிங்சில் பட்டையை கிளப்பி வருகிறார். வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
ஜோதிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான சமயம் அவரது சகோதரி நக்மா தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தார்.
பலரும் நக்மா, ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி என்றே இன்றும் நினைத்து வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.. நடிகை நக்மா ஜோதிகாவின் ஒன்று விட்ட சகோதரி தானே தவிர உடன்பிறந்த சகோதரி அல்ல.
1998 ஆம் ஆண்டு அருண் விஜய், குஷ்பு நடிப்பில் உருவான துள்ளித்திரிந்த காலம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி ரோஷினி.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் மொத்தம் 6 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். பார்ப்பதற்கு ஜோதிகாவை போலவே இருக்கும் ரோஷினியின் புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.