முடி வளர்ச்சியை அதிகரிக்க வீட்டிலேயே வெந்தயம் ஷாம்பு செய்வது எப்படி?

வெந்தயம் ஷாம்பு செய்வது எப்படி: சமையலறையில் இருக்கும் வெந்தயத்தை வைத்து எப்படி முடியை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

Jul 14, 2024 - 14:22
முடி வளர்ச்சியை அதிகரிக்க வீட்டிலேயே வெந்தயம் ஷாம்பு செய்வது எப்படி?

பொதுவாகவே  அனைவரும் தலைமுடியை சிறப்பாக பராமரிக்கவும், அவற்றின் சிறந்த வளர்ச்சிக்காகவும் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்தவது வழக்கம். அந்தவகையில் சமையலறையில் இருக்கும் வெந்தயத்தை வைத்து எப்படி முடியை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

வெந்தயம் ஷாம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

2 டீஸ்பூன் வெந்தய விதைகள்
1 கப் கற்றாழை ஜெல்
1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 கப் தண்ணீர் 

  • முதலில் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலையில் ஊறவைத்த விதைகளை அரைத்து நன்றாக பேஸ்ட் செய்யவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் வெந்தய விழுது, கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி 30 நிமிடங்கள் விடவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவவும்.
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!