ஒரே ஒரு புகைப்படத்தால் இளசுகளை தவிக்க விட்ட பிரியா வாரியர்!

இந்திய சினிமாவையே கலக்கிய காந்த கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ரிலீசான ஒரு அடர் லவ் படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருந்தார்.

Oct 16, 2023 - 11:41
ஒரே ஒரு புகைப்படத்தால் இளசுகளை தவிக்க விட்ட பிரியா வாரியர்!

இந்திய சினிமாவையே கலக்கிய காந்த கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ரிலீசான ஒரு அடர் லவ் படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருந்தார்.

பருவ காதலை தனது காதலனுக்கு கண்ணாலேயே புரிய வைத்த அந்த காதல் வைரஸ், அந்த ஒரே படத்திலேயே வைரல் நாயகியாக மாறிவிட்டார்.

அண்மையில், சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த வினோதய சித்தம் தெலுங்கில் 'ப்ரோ' என்ற பெயரில் வெளியானது. 

இதில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். இப்படம் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

தற்போது பிரியா வாரியர், யாரியான் 2, லவ் ஹேக்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 

இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை மட்டுமில்லாமல் பாடகியாக இருக்கும் பிரியா வாரியர், சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 7.6 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் நடிகை பிரியா வாரியர், கேரள பாரம்பரிய உடையில் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். 

இந்த புடவைக்கு ஏற்றபடி வட்டவடிவத்தில் பொட்டு, காஜல், மை மற்றும் மஸ்காரா போட்டிருக்கிறார். உதட்டிற்கு நியூட் கலர் லிப் ஸ்டிக்கை போட்டுள்ளார். 

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் என் ராத்தூக்கம் போச்சு என புலம்பி வருகின்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!