தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'வதந்தி' என்ற இணையத் தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இவர், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 'தக் லைஃப்', 'பரிமளா & கோ' மற்றும் 'டிசி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள சஞ்சனா, தற்போது நடிகர் கவினுடன் இணைந்து 'பேர் சொல்லும் பிள்ளை' என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.






