கொழும்பில் கனமழை: வீதிகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆமர் வீதி – பாபர் சந்தி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால் புளூமெண்டல், பொரளை டி.எஸ். சந்தி மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளை அண்மித்த பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பயணங்களின்போது அதிக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.