தகவல் தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியை தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்யவும், புதிய தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் ஊடக ஜனநாயகத்தைப் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கவும் தொடங்கப்பட்ட நிறுவனம் www.colombotamil.lk கொழும்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இதன் முதல் வெளியீடு தமிழின் முதல் மொபைல் பத்திரிகை கொழும்புதமிழ் ஆகும்.
* செய்திகளை அவசர கதியில் வழங்காமல் துல்லியமாகவும், தெளிவாகவும், சரியாகவும் வழங்குவதே கொழும்புதமிழ் இணையத்தின் நோக்கம். கொழும்புதமிழ் தினமும் காலை 7 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி என மூன்று தடவைகள் அரசியல், கலை, சமூகம், பொருளாதாரம் என நான்கு பிரிவுகளில் செய்திகளை வெளியிடுகிறது.
* செய்திகளைப் பொறுத்தவரை, அனைத்துச் செய்திகளும் பாரபட்சமில்லாமல் வழங்கப்படும். மக்களைப் பாதிக்கும் செய்திகள், தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள், வக்கிரச் செய்திகள், சாதி/மதவெறியைத் தூண்டும் செய்திகள் வெளிவராது.
* சிறப்புக் கட்டுரைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறை சார்ந்த கட்டுரைகளும் தினமும் வெளியிடப்படும். அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலை, அறிவியல்,பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகள் சார்ந்த விமர்சனங்கள், அலசல்கள், மதிப்பீடுகள், அறிமுகங்கள், பாராட்டுகள் அந்தந்தத் துறைசார்ந்த விமர்சகர்கள், வல்லுநர்கள், நிபுணர்களிடமிருந்து பெறப்பட்டு வெளியிடப்படும்.
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள: editor@colombotamil.lk
தொடர்புகளுக்கு +94742887602