சீரற்ற வானிலை தாக்கம் – நாட்டில் மரக்கறி விலைகள் கடும் உயர்வு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால், மரக்கறி விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.

சீரற்ற வானிலை தாக்கம் – நாட்டில் மரக்கறி விலைகள் கடும் உயர்வு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால், மரக்கறி விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, எதிர்பாராத அளவில் அதிகரித்த விலைகள் குறித்து நுகர்வோர் கடும் கவலையை வெளியிட்டுள்ளனர்.

பொருளாதார மத்திய நிலையங்களில் அண்மையில் பதிவான சந்தை நிலவரங்களின்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் கிலோ ஒன்றுக்கு 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, நுவரெலியாவில் 750 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேபோல், கறிமிளகாய் ஒரு கிலோ நுவரெலியா மற்றும் கெப்பெட்டிபொல பகுதிகளில் 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையிலும், தம்புள்ளையில் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும் விற்பனையாகியுள்ளது.

பச்சை மிளகாயின் விலை மேலும் அதிகரித்து, கெப்பெட்டிபொலவில் கிலோ ஒன்று 650 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையிலும், தம்புள்ளையில் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலும் விற்பனையாகியுள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் கிலோ ஒன்று 900 ரூபாய்க்கும், மஞ்சள் குடை மிளகாய் 1,500 ரூபாய் வரைக்கும் விற்பனையாகியுள்ளது. இதேவேளை, Cauliflower கிலோ ஒன்று 950 ரூபாய்க்கும், Broccoli 1,200 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

கெப்பெட்டிபொலவில் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட Cauliflower, தம்புள்ளையில் 590 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை காணப்படுகிறது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நுவரெலியா கரட் கிலோ ஒன்று 250 ரூபாய் முதல் 330 ரூபாய் வரையிலும், யாழ்ப்பாண கரட் 300 ரூபாய் முதல் 330 ரூபாய் வரையிலும் விற்பனையாகியுள்ளது. கோவா கிலோ ஒன்று 200 ரூபாய்க்கும், போஞ்சி 500 ரூபாய்க்கும், லீக்ஸ் 300 ரூபாய்க்கும், நுவரெலியா பீட்ரூட் 520 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

நுவரெலியாவில் கோவா கிலோ ஒன்று 180 ரூபாய்க்கும், கரட் 330 ரூபாய்க்கும், லீக்ஸ் 300 ரூபாய்க்கும், பீட்ரூட் 400 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. அதேபோல், கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி கிலோ ஒன்று 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலும், பீட்ரூட் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும், கோவா 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும், கரட் 220 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனையாகியுள்ளது.