5 கிலோகிராம் கொக்கெயினுடன் கொழும்பில் மலேசிய நபர் கைது – சுங்கத்துறையின் நடவடிக்கை

இந்த சம்பவத்தில் அபுதாபியில் இருந்து பயணம் செய்த மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 கிலோகிராம் கொக்கெயினுடன் கொழும்பில் மலேசிய நபர் கைது – சுங்கத்துறையின் நடவடிக்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு நடத்திய விசேட நடவடிக்கையில், சுமார் 5 கிலோகிராம் கொக்கெயின் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆரம்ப தகவல்களில் 10 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும், பின்னர் நடைபெற்ற பரிசோதனைகளில் 5 கிலோ கொக்கெயின்தான் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

கைப்பற்றப்பட்ட கொக்கெயினின் சந்தை மதிப்பு சுமார் 250 மில்லியன் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அபுதாபியில் இருந்து பயணம் செய்த மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.