நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் யார் தெரியுமா.. இந்த சீரியல் நடிகையா? வைரலாகும் போட்டோஸ்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 1988 இல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் பல சூப்பர் படங்களில் நடித்திருக்கிறார். முதலில் ஹீரோவாக நடித்து இருந்தார். பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஜோவிகா தற்போது சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும், இவர் சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
சீரியல் நடிகையான இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.