தை அமாவாசை 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வமும் புகழும் சேரும் நாள்!

இந்து மதத்திலும் ஜோதிட மரபிலும் அமாவாசை நாள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் புனிதமான நாட்களாக பார்க்கப்படுகின்றன.

தை அமாவாசை 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வமும் புகழும் சேரும் நாள்!

இந்து மதத்திலும் ஜோதிட மரபிலும் அமாவாசை நாள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் புனிதமான நாட்களாக பார்க்கப்படுகின்றன. இந்த நாட்களில் நிகழும் கிரக நிலைகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே ஜோதிட நம்பிக்கை. 2026 ஆம் ஆண்டில் தை அமாவாசை ஜனவரி 18ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளை விட தை மாத அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் புனித நதிகளில் நீராடுதல், தானம் செய்தல், மௌன விரதம் மேற்கொள்வது போன்ற சடங்குகளை பக்தர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இவை கடந்த கால பாவங்களை நீக்கி, வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், இந்த தை அமாவாசை சில ராசிக்காரர்களுக்கு செல்வம், புகழ் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை அள்ளித் தரும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தை அமாவாசை தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும் நாளாக அமையப் போகிறது. உங்கள் துணிச்சலான முடிவுகள் நல்ல பலனைத் தரும். வேலை தொடர்பான முக்கிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். உங்கள் பேச்சும் செயல்பாடும் மற்றவர்களின் ஆதரவைப் பெற உதவும். எதிர்பாராத ஒரு சந்திப்பு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். புதிய வேலை அல்லது புதிய முயற்சி குறித்து யோசித்து வந்தால், அதற்கான உதவிகள் தானாகவே உங்களைத் தேடி வரும். உங்கள் உற்சாகமும் புத்துணர்ச்சியும் தொழில் வாழ்க்கையில் புதிய உயரத்தை எட்ட உதவும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு தை அமாவாசை தொழில் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும். பெரிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்கக்கூடும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் காலம் இது. சமூகத்தில் உங்கள் மதிப்பும் நற்பெயரும் உயரும். குடும்ப வாழ்க்கையிலும் காதல் உறவுகளிலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

மகர ராசிக்காரர்களுக்கு இந்த தை அமாவாசை மிகவும் அனுகூலமானதாக இருக்கும். கடந்த கால சிக்கல்கள் மற்றும் மன அழுத்தங்களை விட்டு விட்டு புதிய பாதையில் முன்னேற நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும், நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீர்வை நோக்கி நகரும். திருமணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தை அமாவாசை வாழ்க்கையில் தெளிவையும் தைரியமான முடிவுகளையும் கொண்டு வரும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். தொழில் மற்றும் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க இது உகந்த நாள். புதிய தொடக்கங்களுக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். உறவுகள் மேலும் இனிமையாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். ஜோதிட சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு முன் தகுந்த ஜோதிட நிபுணரை அணுகுவது சிறந்தது. இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.