உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுகாதார வசதிகள், போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் மோசமான வாழ்க்கைத் தர நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக 2025 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசை அறிக்கை தெரிவிக்கிறது. உலகளாவிய அளவில் வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்து தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுகாதார வசதிகள், போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உலகின் மிக மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை இரண்டாம் இடத்தையும், பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. புள்ளிவிவரங்களின்படி, நைஜீரியா பூச்சிய புள்ளிகளுடன் முதலிடத்திலும், 61 புள்ளிகளுடன் இலங்கை இரண்டாம் இடத்திலும், 73 புள்ளிகளுடன் பங்களாதேஷ் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இதற்கு மாறாக, உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் லக்ஸ்சம்பேர்க் ஆகிய நாடுகள் முன்னணி இடங்களில் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.