பொங்கல் முடிந்தவுடன் கஜகேசரி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும்

சந்திரன் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை குறிக்கும் கிரகமாகவும், குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், நீதி மற்றும் மங்கள நிகழ்வுகளின் காரணியாகவும் கருதப்படுகிறார்.

பொங்கல் முடிந்தவுடன் கஜகேசரி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும்

பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு ஜோதிட ரீதியாக ஒரு முக்கியமான ராஜயோகம் உருவாகி வருகிறது. ஜோதிடத்தின்படி, சந்திரன் மற்றும் குரு ஒரே ராசியில் அல்லது கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் இணையும் போது உருவாகும் யோகமே ‘கஜகேசரி ராஜயோகம்’. சந்திரன் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை குறிக்கும் கிரகமாகவும், குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், நீதி மற்றும் மங்கள நிகழ்வுகளின் காரணியாகவும் கருதப்படுகிறார். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்த கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அளிக்கவுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். மிதுன ராசியில் இந்த ராஜயோகம் உருவாவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியடையும். நீண்ட காலமாக தடைபட்டு நின்ற பணிகள் மீண்டும் வேகம் பெறும். பணியிட மன அழுத்தங்கள் குறையும்; உங்களுக்கு தொல்லை அளித்த அதிகார மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சமூகத்தில் உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் மதிப்பு அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் தன ஸ்தானத்தில் அமையுவதால் பொருளாதார முன்னேற்றம் தெளிவாக தெரியும். வறுமை நிலை நீங்கி வசதி வாய்ப்புகள் பெருகும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்; திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வரக்கூடும். மனதில் புதிய தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஆளுமை மற்றும் அங்கீகாரம் சார்ந்த முன்னேற்றத்தை தரும். லாப ஸ்தானத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். பணியிடத்தில் பாராட்டு மற்றும் உயர்வு கிடைக்கும். குறிப்பாக ஊடகம், எழுத்து, கல்வி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். பொருளாதார நிலையும் படிப்படியாக மேம்படும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் ஏழாம் வீட்டில் உருவாவதால் திருமண உறவுகள் மற்றும் தொழில் கூட்டாண்மைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்து காத்திருந்த வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, இலாபம் தரும் ஆர்டர்கள் கிடைக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகி நிதி நிலை வலுப்படும்.