கீபோர்டில் காணப்படும் இரு கோடுகள் எதற்காக தெரியுமா?

கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கூட கடக்கவே முடியாது.  அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. 

Aug 21, 2024 - 17:41
கீபோர்டில் காணப்படும் இரு கோடுகள் எதற்காக தெரியுமா?

கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கூட கடக்கவே முடியாது.  அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. 

இந்த கணினியில் டைப் செய்வதற்கு கீபோர்டு தேவைப்படும். இந்த கீபோர்டில் பல பட்டன்கள் இருந்தாலும் அதில் சில பட்டன்களில் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

அதிலும் குறிப்பாக F மற்றும் J பட்டனில் இருக்கும் 2 கோடுகளை கவனித்திருக்க மாட்டீர்கள். பெரும்பாலானோர் இந்த கோட்டை கவனித்திருக்க மாட்டார்கள். 

மற்ற பட்டன்களில் இல்லாமல் இந்த பட்டன்களில் மட்டும் ஏன் கீழ் கோடு உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

கீபோர்டில் உள்ள நடு வரிசை முகப்பு வரிசை விசை நிலை என்று அழைக்கப்படுகிறது. F மற்றும் J விசைகளில் உங்கள் இடது மற்றும் வலது கைகளை வைத்தவுடன், நீங்கள் விசைகளை அணுகுவது மிகவும் எளிதாகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.

நடுக்கோட்டில் கைகளை சரியான நிலையில் வைப்பதன் மூலம், மேல் மற்றும் கீழ் கோடுகளில் நகர்த்துவது மிகவும் எளிதாகிறது. இங்கே விரல்களை வைப்பதன் மூலம் உங்கள் இடது கை A, S, D மற்றும் F ஆகியவற்றை உள்ளடக்கியது. 

அதே சமயம், வலது கை J, K, L மற்றும் (;) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த நேரத்தில் இரண்டு கட்டை விரல்களும் ஸ்பேஸ் பாரில் இருக்கும்.

எளிதில் கீழே பார்க்காமல் வேகமாக டைப் செய்வதற்கும், பார்வை மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்துவதற்கு எளிமையாக இருக்கவும் இந்த கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!