பாரிஸில் பெண் துன்புறுத்தல்: இலங்கையைச் சேர்ந்த தமிழருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை

பாரிஸில் உள்ள ஆடைக் கடையில் பணிபுரிந்த வெளிநாட்டுப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக, 48 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பாரிஸில் பெண் துன்புறுத்தல்: இலங்கையைச் சேர்ந்த தமிழருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை
AI generated image

பிரான்சின் பாரிஸில் பெண் ஒருவரை துன்புறுத்திய குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாரிஸில் உள்ள ஆடைக் கடையில் பணிபுரிந்த வெளிநாட்டுப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக, 48 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பொலிஸ் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் எந்தவிதமான நட்புறவும் இல்லாத நிலையில், அவரை தன்னை காதலிப்பதாக நபர் தவறாக எண்ணியதும், தொடர்ந்து பின்தொடர்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. முதலில் அந்த பெண் இந்தியர் என அவர் கருதியதாகவும், பின்னர் அவர் வேறு நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளான அந்த பெண், பொலிஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நபர் கைது செய்யப்பட்டார்.

வீரசிங்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட பெண் கடுமையான மனநிலை பாதிப்பை சந்தித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.