மனைவி எப்போதும் கணவனின் இடது பக்கத்தில் படுக்க வேண்டும் – ஏன் தெரியுமா? 

புராணங்களில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவில் – அதாவது உடலின் வலது பாதி ஆண், இடது பாதி பெண் – காட்சியளிக்கிறார். இங்கு, பார்வதி தேவியானவர், சிவனின் இடது பாதியாக அமைந்துள்ளார்.

மனைவி எப்போதும் கணவனின் இடது பக்கத்தில் படுக்க வேண்டும் – ஏன் தெரியுமா? 

இந்து மரபுகளில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானது. வீடு, அலுவலகம், குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் சாஸ்திரப்படி பின்பற்றப்பட வேண்டிய விதிகள் உள்ளன. அதில் ஒன்றாக, தம்பதியர் எவ்வாறு படுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்து மரபுப்படி, மனைவி கணவனின் இடது பக்கத்தில் படுக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது. இதற்குப் பின்னால் ஆன்மீகம், விஞ்ஞானம், சாஸ்திரம் ஆகியவற்றின் ஆழமான காரணங்கள் உள்ளன.

புராணங்களில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவில் – அதாவது உடலின் வலது பாதி ஆண், இடது பாதி பெண் – காட்சியளிக்கிறார். இங்கு, பார்வதி தேவியானவர், சிவனின் இடது பாதியாக அமைந்துள்ளார். இந்த ஆன்மீக சின்னம், பெண் ஆணின் இடது பக்கம் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. இதனால்தான் மனைவி "வாமாங்கி" என்று அழைக்கப்படுகிறார் – "வாமம்" என்றால் இடது, "அங்கி" என்றால் அங்கம். அதாவது, ஆணின் இடது அங்கமாக பெண் கருதப்படுகிறார்.

இந்த மரபு மட்டுமல்லாமல், ஆரோக்கியம் மற்றும் மன அமைதி ஆகியவற்றையும் இந்த பழக்கம் பாதிக்கிறது என நம்பப்படுகிறது. கணவனின் இடது பக்கம் மனைவி படுத்தால், அவர்களின் உடல் ஆற்றல்கள் (ஊர்ஜா) சமநிலையில் இருக்கும் என்று வாஸ்து மற்றும் யோக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது கணவனின் இதயத்திற்கு அருகில் மனைவி இருப்பதாகவும், இதன் மூலம் உணர்ச்சி நெருக்கமும், பாசமும் வலுப்பெறும் என்றும் கருதப்படுகிறது.

இது மட்டுமல்ல, செழிப்பும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் இந்த வழக்கத்தின் மூலம் கிடைக்கும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. மனைவி கணவனின் இடது பக்கம் இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பொருளாதார நிலையும் ஸ்திரமாக இருக்கும் என்பது ஐதீகம்.

இருப்பினும், சில சமயங்களில் இந்த நிலை மாறும். பூஜை, யாகம், திருமணம், கன்னியாதானம், நாமகரணம், அன்னப்பிராசனம் போன்ற ஆன்மீகம் மிகுந்த சடங்குகளின் போது, மனைவி கணவனின் வலது பக்கத்தில் அமர வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில், இந்த சடங்குகள் "புருஷார்த்தம்" – அதாவது ஆண் ஆற்றலை வலியுறுத்தும் செயல்களாகக் கருதப்படுகின்றன. அதே நேரத்தில், லௌகீக வாழ்க்கையில் – அதாவது பொது வாழ்வு, வீட்டு விவகாரங்கள், தினசரி பணிகள் – இவற்றில் பெண்ணின் ஆதிக்கம் முக்கியம் என்பதால், அப்போது மனைவி இடது பக்கத்தில் இருக்க வேண்டும்.

எனவே, இந்த வழக்கம் வெறும் பழக்கம் மட்டுமல்ல – ஆன்மீக சமநிலை, சமூக அமைப்பு, உடல் ஆற்றல் மற்றும் குடும்ப ஒற்றுமைக்கான ஒரு ஆழமான தத்துவமாகும்.

இந்த தகவல்கள் இந்து சமய மரபுகள், வாஸ்து சாஸ்திரம் மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை நம்பிக்கை அடிப்படையிலானவை மட்டுமே. தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது.