பொங்கல் பாக்ஸ் ஆபிஸ்: ‘பராசக்தி’ 9 நாள் வசூல் எவ்வளவு? பட்ஜெட்டை எட்டியதா?
பொங்கல் ரிலீஸாக Jananayagan படத்துடன் போட்டிபோட்டு வெளியாக இருந்த ‘பராசக்தி’, அந்த படம் சென்சார் சிக்கலால் தள்ளிப்போனதால் தனியாக திரைக்கு வந்தது.
இயக்குநர் Sudha Kongara இயக்கத்தில், நடிகர் Sivakarthikeyan நடிப்பில் உருவான பிரமாண்ட திரைப்படம் ‘பராசக்தி’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக Sreeleela நடித்துள்ள இந்த படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் Ravi Mohan நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் Atharvaa தோன்றியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இப்படம், ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றது.
பொங்கல் ரிலீஸாக Jananayagan படத்துடன் போட்டிபோட்டு வெளியாக இருந்த ‘பராசக்தி’, அந்த படம் சென்சார் சிக்கலால் தள்ளிப்போனதால் தனியாக திரைக்கு வந்தது. இதனால் பொங்கல் விடுமுறையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. மேலும், இது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம் என்பதும் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமையேற்று, அந்த போராட்டத்தின் போது உயிரிழந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கைதான் கதையின் மையம். அந்த ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
பெரும் ஹைப் உடன் வெளியான ‘பராசக்தி’, விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளையே பெற்றது. சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றதாக சொல்லப்படுகிறது.
135 முதல் 140 கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் உருவான இந்த படம், ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் நல்ல வசூலை பெற்றாலும், அதன் பிறகு பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேகமாக சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 நாட்கள் முடிவில் படம் சுமார் 76 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், 9 நாட்களில் 84 கோடி ரூபாயை மட்டுமே எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் முந்தைய வெற்றி படமான ‘அமரன்’ உடன் ஒப்பிடும்போது, ‘பராசக்தி’ பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதுவரை வெளியான வசூல் கணக்குகளின்படி, படம் தனது தயாரிப்பு பட்ஜெட்டை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.
