நிவேதா பெத்துராஜின் திருமணம் ரத்தானதா? காதல் முறிவு தொடர்பில் வெளியான தகவல்!

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது இயல்பான நடிப்புத் திறமையைக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.

நிவேதா பெத்துராஜின் திருமணம் ரத்தானதா? காதல் முறிவு தொடர்பில் வெளியான தகவல்!

2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், அப்படத்தில் தனது இயல்பான நடிப்புத் திறமையைக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றார். குறிப்பாக, "அடியே அழகே" என்ற பாடல் மூலம் அவர் பரவலாக அறியப்பட்டார்.

அதன்பின் என்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபிடிச்சவன், சங்கதமிழன், பொன்மாணிக்கவேல் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் சினிமாவுடன் தெலுங்கு திரையுலகிலும் சாதனை படைத்த நிவேதா, 2023-ஆம் ஆண்டைத் தொடர்ந்து திரைப்படங்களில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், அவர் துபாயில் செட்டில் ஆகி, அங்கு வணிகத்துறையில் ஈடுபட்டிருக்கும் ராஜித் இப்ரான் என்பவரைக் காதலித்து வருவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பகிர்வுகள் மூலம் தெரியவந்தது. அவர் ராஜித்தை மட்டுமே இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வந்தார்.

எனினும், சமீபத்தில் அந்தக் காதல் சார்ந்த அனைத்து புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ராஜித் இப்ரானை ஃபாலோ செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், அவர்களது உறவு முறிந்துவிட்டது அல்லது திருமண ஏற்பாடுகள் ரத்தாகியுள்ளன என்ற ஊகங்களை சினிமா வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

தற்போதுவரை நிவேதா அல்லது அவரது குடும்பம் இந்த விவகாரம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.