திரையரங்குகளில் கூட்டமே இல்லாமல், வசூலில் மட்டும் பெரிய சாதனை என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது - நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன், தற்போதைய சினிமா வசூல் கணக்குகள் குறித்து ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

“திரையரங்குகளில் மக்கள் கூட்டமே இல்லாமல், வசூலில் மட்டும் பெரிய சாதனை என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய சிம்ரன், இந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘டிராகன்’, ‘3 பி.எச்.கே.’ போன்ற படங்கள் மக்களின் ஆதரவையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றதாகக் குறிப்பிட்டார்.

“இந்தப் படங்கள் வெளியான ஒரு வாரத்தில் கூட திரையரங்குகளில் மக்கள் நிரம்பி வழிந்தன. ஆனால், பல பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் சமூக ஊடகங்களில் கோடி கோடியாக வசூல் சாதனை என்று அறிவிக்கப்படுகின்றன. ஆனால் நேரில் திரையரங்குகளுக்குச் சென்றால், அங்கு சீட்டுகள் காலியாகவே இருக்கின்றன” என்று விமர்சனமாகப் பேசியுள்ளார்.

இதுபோன்ற மாறுபாடுகள் குறித்து அவர் ஆச்சரியம் தெரிவித்து, “மக்கள் கூட்டமே இல்லாமல் வசூலில் மட்டும் சாதனை என்று எதை வைத்து மிகைப்படுத்துகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘பேட்ட’, ‘குட் பேட் அக்லி’ போன்ற படங்களில் தனக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களில் சிம்ரன் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.