டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி மரணம்: பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்கள்!
ராஜேஸ்வரியின் மறைவு, தொலைக்காட்சி துறையிலும் சக நடிகர்–நடிகைகளிடமும் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்த தொடர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயத 39) என்ற டி.வி. சீரியல் நடிகை, உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘சிறகடிக்க ஆசை’, ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘பனி விழும் மலர் வனம்’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், சில திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார்.
கடந்த சில நாட்களாக குடும்ப சூழ்நிலை தொடர்பாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர் சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கியபடியே சீரியல் பணிகளைத் தொடர்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தன்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆரம்பகட்ட விசாரணையில், குடும்பச் சிக்கல்கள் மற்றும் மனஅழுத்தம் இந்தத் துயரமான முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதுதுகுறித்து பொலிஸார் கூறும்போது, “சதீஷ்-ராஜேஸ்வரி தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த ராஜேஸ்வரி திட்டமிட்டார். இதற்காக சமீபத்தில் கிடைத்த வீட்டின் குத்தகை தொகை ரூ.13 லட்சத்தை பயன்படுத்த நினைத்தார். இதற்கு சதீஷ் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ராஜேஸ்வரி அளவுக்கதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை ஒரேடியாக உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்றனர்.
கணவர் சதீஷ் மற்றும் குடும்பத்தினரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜேஸ்வரியின் மறைவு, தொலைக்காட்சி துறையிலும் சக நடிகர்–நடிகைகளிடமும் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்த தொடர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
