குடியுரிமை சட்டத்தில் அதிரடி திருத்தம்; கனடா எடுத்துள்ள நடவடிக்கை; விவரம் இதோ

கனடா தனது குடியுரிமை விதிகளில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இந்த மாற்றம், குறிப்பாக வெளிநாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளி குடும்பங்கள் மற்றும் பல கனேடியர்களுக்கு பெரும் நன்மை அளிக்கும்.

குடியுரிமை சட்டத்தில் அதிரடி திருத்தம்; கனடா எடுத்துள்ள நடவடிக்கை; விவரம் இதோ

கனடா தனது குடியுரிமை விதிகளில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இந்த மாற்றம், குறிப்பாக வெளிநாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளி குடும்பங்கள் மற்றும் பல கனேடியர்களுக்கு பெரும் நன்மை அளிக்கும்.

குடிவரவு அமைச்சர் லீனா மெட்லேஜ் டயப் தெரிவித்ததாவது: பில் C-3 நீண்ட காலமாக இருந்த சட்ட குறைபாடுகளை சரி செய்யும். வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு நியாயத்தை வழங்கும்.

காலத்திற்கேற்ற குடும்ப அமைப்புகளை பிரதிபலிக்கும் புதிய விதிகளை உருவாக்குகிறது. முந்தைய கட்டுப்பாடுகள் காரணமாக குடியுரிமை இழந்தவர்களுக்கு (“Lost Canadians”) மீண்டும் குடியுரிமை கிடைக்கும்.

2009ஆம் ஆண்டு அறிமுகமான விதி: பெற்றோரில் ஒருவர் கனடாவில் பிறந்தவர் அல்லது இயற்கை குடிமகன் என்றாலே வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியுரிமை பெற முடியாமல் "Lost Canadians" குழுவில் சேர வேண்டியதாக இருந்தது.

2023 டிசம்பரில், ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இந்த விதியை அரசியலமைப்புக்கு முரண்பாடானது என்று தீர்ப்பளித்தது. அரசாங்கமும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டதால், சட்ட திருத்தம் அவசியமானது.

புதிய பில் C-3 படி: வெளிநாட்டில் குழந்தை பிறப்பதற்கு முன் கனேடிய பெற்றோர் குறைந்தது 1,095 நாட்கள் (சுமார் 3 வருடங்கள்) கனடாவில் வாழ்ந்திருக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும். இது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் விதிகளுக்கு ஒத்ததாகும்.

நீதிமன்றம் மாற்றங்களை செயல்படுத்த ஜனவரி 2026 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்ததும், குடியுரிமை விண்ணப்பங்களில் அதிகரிப்பு இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 1947 குடியுரிமைச் சட்டத்தில் இருந்த பல குறைகள் 2009 மற்றும் 2015 திருத்தங்களில் சரிசெய்யப்பட்டன. இதுவரை சுமார் 20,000 பேர் தங்கள் குடியுரிமையை மீட்டுள்ளனர். இந்த புதிய திருத்தம், மீதமுள்ளவர்களுக்கும் தீர்வாக இருக்கும்.