புதன்-குரு இணைவு 2026: இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! இரட்டிப்பு லாபம் உறுதி!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் இணைவு அமைப்புகளைப் பொறுத்தே 12 ராசிகளின் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

புதன்-குரு இணைவு 2026: இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்! இரட்டிப்பு லாபம் உறுதி!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் இணைவு அமைப்புகளைப் பொறுத்தே 12 ராசிகளின் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கிரக நிலைகள் சாதகமாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றமும், எதிர்மறையாக இருந்தால் சவால்களும் உருவாகும். அந்த வகையில், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும் போது உருவாகும் யோகங்கள், சில ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

2026 ஆம் ஆண்டில் உருவாகும் புதன்–குரு சேர்க்கை, குறிப்பாக மூன்று ராசிகளின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். புதன் தொழில், புத்திசாலித்தனம், கணக்கு மற்றும் பேச்சுத் திறனை குறிக்கக் கூடிய கிரகமாகும். அதே நேரத்தில் குரு பகவான் செல்வம், செழிப்பு, பெயர், புகழ், குழந்தை பாக்கியம் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு காரகனாக விளங்குகிறார். இந்த இரண்டு கிரகங்களின் இணைவு கடகம், துலாம் மற்றும் கும்ப ராசியினருக்கு இரட்டிப்பு லாபத்தைத் தரும் ஜாக்பாட் யோகமாக அமையவுள்ளது.

கடக ராசி

இந்த கிரகச் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக பணவரவு அதிகரிக்கும் சூழல் உருவாகும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நல்ல நிறுவனத்திற்கு வேலை மாற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில், குறிப்பாக கணவன்–மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

துலாம் ராசி

புதன்–குரு சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு வெளிநாடு அல்லது வெளியூர் பயண வாய்ப்புகளை உருவாக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண முயற்சிகள் நிறைவேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்து அதன் மூலம் அதிக வருமானம் ஈட்டும் சூழல் உருவாகும். குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும் கிடைக்கும். கடன்கள் அடையும் காலமாக இது அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் காணப்படும்.

கும்ப ராசி

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்கும். கடினமாக தோன்றிய வேலைகளையும் எளிதாக முடித்து வெற்றி காண்பீர்கள். கடன் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் திரும்ப கைக்கு வரும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனம் வாங்கும் யோகமும், புதிய வீட்டிற்கு இடம் மாறும் சூழலும் உருவாகலாம்.