இரவில் திடீரென அடிக்கடி முழிப்பு வருகிறதா? காரணம் என்ன? தீர்வு என்ன!

மன அழுத்தமும் தூக்கப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதியாக்கி, ஆழமான தூக்கத்தை உறுதி செய்ய உதவும்.

இரவில் திடீரென அடிக்கடி  முழிப்பு வருகிறதா? காரணம் என்ன?  தீர்வு என்ன!

தூக்கம் என்பது உடல் மற்றும் மனதின் சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமானது. இருப்பினும், பலர் இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து திடீரென முழித்து விடுகின்றனர். இது ஒரு நாளில் மட்டும் நடந்தால் கவலையில்லை; ஆனால் தொடர்ந்து நிகழ்ந்தால், அதற்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிவது அவசியம்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தூங்குவதற்கு முன் மொபைல், டிவி அல்லது பொதுவான விளக்குகளிலிருந்து வெளிப்படும் ப்ளூ ரே ஒளி, தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பைக் குறைக்கிறது. எனவே, தூங்கும் அறையில் ஒளியை முற்றிலும் அணைத்துவிடுவதும், திரை சாதனங்களைத் தவிர்ப்பதும் நல்லது.

ஒழுங்கான தூக்க நேரம் உங்கள் உடலின் உள்ளார்ந்த சர்க்காடியன் தாளத்தை சீராக வைத்திருக்க உதவும். எனவே, வார இறுதி நாட்களிலும் ஒரே நேரத்தில் தூங்கியும், எழுந்தும் பழக வேண்டும்.

தூக்கத்தை மேம்படுத்த இயற்கையான உணவுகளும் உதவும். உதாரணமாக, செர்ரி அல்லது அதன் சாறு, பாதாம், வாழைப்பழம் போன்றவை மெலடோனின் சுரப்பை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில், இரவில் கனமான அல்லது காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

வைஃபை ரவுட்டர்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள், உடலின் இயல்பான தூக்கத் தாளத்தை பாதிக்கக்கூடும். எனவே, தூங்கும் நேரத்தில் இவற்றை அணைப்பது நல்லது.

மன அழுத்தமும் தூக்கப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதியாக்கி, ஆழமான தூக்கத்தை உறுதி செய்ய உதவும்.

மேலும், தூக்கமின்மை உடலில் கார்டிசோல், வளர்சிதை மாற்ற ஹார்மோன்களில் சமநிலையை கலைக்க வாய்ப்புள்ளது. இதனால் சீரான உணவு முறையும், நல்ல தூக்க பழக்கமும் மிக முக்கியம்.

கடைசியாக, தூங்கும் அறையின் வெப்பநிலை சுமார் 18°C இருப்பது சிறந்தது. மேலும், கால்களில் சாக்ஸ் அணிவது, உடல் வெப்பநிலையை சீராக்கி, மெலடோனின் சுரப்பை ஊக்குவிக்கும்.

இவ்வாறான சிறிய மாற்றங்கள் மூலம் தொடர்ந்து திடீரென விழிப்பதைத் தடுத்து, ஆழமான, தரமான தூக்கத்தைப் பெற முடியும்.