கிழிந்த உடையில்.. இரவில் தெருவில் திரிந்த நடிகை... வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரபல நடிகை சுமி ஹர் சௌத்ரி, புர்பா பர்தாமன் பகுதியில் கிழிந்த அழுக்கு உடையில் தெருவில் சுற்றித் திரிந்து நிலையில் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை சுமி ஹர் சௌத்ரி, புர்பா பர்தாமன் பகுதியில் கிழிந்த அழுக்கு உடையில் தெருவில் சுற்றித் திரிந்து நிலையில் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பல திரைப்படங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் எப்படி தெருவுக்கு வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக வங்காள திரைப்படத்துறையில் நடிகை சுமி ஹர் சௌத்ரி பணியாற்றி உள்ளார். "த்விதியோ புருஷ்" என்ற க்ரைம் திரில்லர் திரைப்படம் மற்றும் "காஷி கதா: எ கோட் சாகா" போன்ற படங்களில் நடித்தன் மூலம் பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக சினிமா, சீரியலில் என எதிலும் தென்படாத இவர், தற்போது, மேற்கு வங்காளம் புர்பா பர்தாமன் மாவட்டத்தில் உள்ள அமிலா பஜார் அருகே சாலையோரத்தில் தான் யார் என்றே தெரியாது, மனம் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தெருவில் திரிந்து கொண்டிருந்த நடிகை சுமி ஹர் செள்தரியை பார்த்த உள்ளூர் மக்கள், அவரிடம் பேசி உள்ளனர். ஆனால், அதற்கு எல்லாம் சரியாக பதில் சொல்லக்கூடிய நிலையில் அவர் இல்லை.
அதுமட்டுமில்லாமல், பல நாட்களாக அவர் குளிக்காததால் அவர் மீது துர்நாற்றம் வீசி உள்ளது. அதே போல, கிழிந்த அழுக்கு உடையுடன் தெருவில் இருந்துள்ளார். இருந்த போதும், பாதிக்கப்பட்டு இருப்பவர் பெண் என்பதால், அந்த பகுதி மக்கள், அவர் குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர், தன் கையில் வைத்து இருந்த பேப்பரில் நடிகை, சினிமா என்று எழுதி இருக்கிறார். இதைப்பார்த்த இளைஞர்கள், நீங்கள் சினிமா நடிகையா... அப்படி என்றால் என்ன பெயர் என்று கேட்டு விசாரித்த அப்போது தான், தன் பெயர் சுமி ஹர் சௌத்ரி என்று கூறியுள்ளார்.
இந்த பெயரை கேட்ட இளைஞர்கள், அந்த பெயரை கூகுளில் போட்டு தேட, அவர் பெரிய நடிகை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகையை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பெரிய நடிகையான அவருக்கு என்ன நடந்தது. எப்படி இந்த நிலைமைக்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். தற்போது நடிகை மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.