தாயாரின் பிறந்தநாளை தங்கக் கேக்குடன் கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா

கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய ஊர்வசி, நேற்று தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே ஆடம்பரத்துடன் கொண்டாடியுள்ளார்.

தாயாரின் பிறந்தநாளை தங்கக் கேக்குடன் கொண்டாடிய ஊர்வசி ரவுத்தேலா

நடிகை ஊர்வசி ரவுத்தேலா தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருப்பவர். 'லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடிக்கடி தனது வாழ்க்கையில் ஏற்படும் சர்ச்சைகள் மற்றும் கவர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக டிரெண்டிங்கில் இடம்பிடிக்கிறார்.

கிரிக்கெட் மைதானத்தில் தங்க ஸ்மார்ட்போன் திருட்டு, ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்தது போன்ற சம்பவங்கள் மட்டுமின்றி, பத்ரிநாத் கோவில் அருகே தனக்கு “கோவில் இருக்கிறது” என்று கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தியது போன்ற சர்ச்சைகள் இவரை நிரந்தரமாக ஊடகங்களின் கவனத்தில் வைத்திருக்கின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்திய ஊர்வசி, நேற்று தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே ஆடம்பரத்துடன் கொண்டாடியுள்ளார். உலகின் மிக உயரமான ஓட்டலில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “என் தாயின் பிறந்தநாள் உலகளவில் கொண்டாடப்படுகிறது. 24 காரட் தங்கக் கிரீடம் பூசப்பட்ட கேக், தூய அன்பு” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.