நடிகை ஸ்ரீ தேவியின் தங்கை யார் தெரியுமா? என்ன பண்றாங்க தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவியின் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் "அவரது தங்கை யார்?" என்று தேட ஆரம்பித்துள்ளனர்.

நடிகை ஸ்ரீ தேவியின் தங்கை யார் தெரியுமா? என்ன பண்றாங்க தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவியின் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் "அவரது தங்கை யார்?" என்று தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ரீதேவி, இயக்குனர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரது மகள் ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்தது, இந்திய திரையுலகினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஸ்ரீதேவியின் குடும்பத்தில் அவரது தங்கை ஸ்ரீலதாவும் நடிகையாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரால் நடிகையாக திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

இதனால் அவர் ஸ்ரீதேவியின் மேலாளராக செயல்பட்டார். 1972 முதல் 1993 ஆம் ஆண்டு வரை ஸ்ரீதேவியின் நிழலாகவே இருந்தார் ஸ்ரீலதா.

அவர்கள் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக ஸ்ரீதேவியின் தாயார் மறைந்த பிறகு சகோதரிகள் பிரிந்து விட்டதாக நம்பப்படுகிறது.


ஸ்ரீதேவியின் தாயார் 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததே காரணம் என்று குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிராக ஸ்ரீதேவி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் ஸ்ரீதேவி தரப்பு வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை தங்கைக்கு அவர் வழங்காமல் முழுவதையும் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து ஸ்ரீலதா வழக்கு தொடர்ந்து அவருக்கான பங்கினை பெற்றுக் கொண்டுள்ளார். இது இருவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆனால் இப்போது ஸ்ரீலதா எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு கூட அவரது தங்கை ஸ்ரீலதா வரவில்லை என்று கூறப்படுகிறது.