பிக்பாஸ் தமிழ் 9: பார்வதிக்கு திவாகரின் திடீர் திருமணப் பிரபோசல் – வியானாவின் நச் பதிலால் பரபரப்பு

திவாகர், வி.ஜே. பார்வதியைக் குறித்து பேசும்போது, "பேசாம பாருவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 9: பார்வதிக்கு திவாகரின் திடீர் திருமணப் பிரபோசல் – வியானாவின் நச் பதிலால் பரபரப்பு

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன், சமூகவலைதளங்களில் பிரபலமான நபர்கள் அதிகம் பங்கேற்றதால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானாலும், நிகழ்ச்சியில் நடக்கும் திருப்பங்கள் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது, பிக்பாஸ் வீடு தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன் மற்றும் வியானாவுடன் கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருந்தபோது, திவாகர் ஒரு யோசனையை முன்வைத்தார்.

திவாகர், வி.ஜே. பார்வதியைக் குறித்து பேசும்போது, "பேசாம பாருவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதற்கு வியானா, "தங்கை என்று சொல்லிவிட்டு திருமணம் செய்யலாமா? அது ஒரு மாதிரி இருக்கும்" என்று கூறி நச் பதிலளித்துள்ளார். கம்ருதீன், "உங்களை தப்பா பேசுவாங்க அண்ணா" என்று கூறி திவாகருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த உரையாடல் வெளியானதையடுத்து, நெட்டிசன்கள் "என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

போட்டியாளர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் வெடித்து வரும் நிலையில் இந்த புதிய நிகழ்வு நடந்துள்ளது. முன்னதாக, ஜூஸ் மேக்கிங் டாஸ்க்கில், வி.ஜே. பார்வதியும், திவாகரும் ஆதிரை தயாரித்த ஜூஸை நிராகரித்தனர்.

இதனால் கோபமடைந்த ஆதிரை, பார்வதி மற்றும் திவாகருடன் சண்டை போட்டார். ஆதிரை, பார்வதியையும் திவாகரையும் பார்த்து "உனக்கு அவங்க அதிகமாக சோறு தராங்கல்ல" என்று கூறியதும், கடுப்பான திவாகர், பார்வதியை விளாச ஆரம்பித்தார். இதற்கு முந்தைய வாரம், திருநங்கை அப்சரா சி.ஜே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வழக்கமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த சீசனை, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது குறித்து விமர்சனங்கள் உள்ளன. மேலும், ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட இயக்குனர் பிரவீன் காந்தி, விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் பாதியில் விலகிவிடுவார் என்றும் கூறியிருந்தார்.