பிக்பாஸ் தமிழ் சீசன் 9: "உங்களுக்கு ரூல்ஸ் தெரியல... நீ அவளுக்கு கூஜா தான தூக்குற" - பெரும் பிரளயத்தில் பிக்பாஸ் வீடு!

முன்னதாக, வி.ஜே. பார்வதியும் திவாகரும் ஆதிரை தயாரித்த ஜூஸை நிராகரித்தபோது மோதல் ஏற்பட்டிருந்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: "உங்களுக்கு ரூல்ஸ் தெரியல... நீ அவளுக்கு கூஜா தான தூக்குற" - பெரும் பிரளயத்தில் பிக்பாஸ் வீடு!

2017 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது 8 சீசன்களைக் கடந்து 9-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. விமர்சகர்களைக் கூட ரசிகர்களாக மாற்றிய இந்த நிகழ்ச்சி, அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வி.ஜே. பார்வதி, கனி, திவாகர், ஆதிரை, வினோத், கம்ருதீன், சபரி உட்பட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது, நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி மற்றும் திருநங்கை அப்சரா சி.ஜே ஆகிய மூன்று பேர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ் 9: பார்வதிக்கு திவாகரின் திடீர் திருமணப் பிரபோசல் – வியானாவின் நச் பதிலால் பரபரப்பு

பிக்பாஸ் வீடானது சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ், பிக்பாஸ் ஹவுஸ் என இரண்டு வீடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸில் இருப்பவர்கள் தான் பிக்பாஸ் வீட்டை 'ரூல்' செய்து வருகின்றனர்.

சூப்பர் டீலக்ஸ் ஹவுஸில் இருக்கும் வி.ஜே. பார்வதிக்கும், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கனிக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்து வருகின்றன. தற்போது, 18-ஆம் நாளின் முதல் ப்ரொமோவில் இந்தச் சண்டை பெரும் பிரளயமாக வெடிப்பதைக் காண முடிகிறது.

பார்வதியைப் பார்த்து கனி, "சொன்ன எதுவுமே பண்ணமாட்டீர்கள் என்றால் அப்பறம் எதுக்கு தான் இந்த வீட்டில் இருக்கீங்க" என்று கேட்கிறார்.

மேலும், சூப்பர் டீலக்ஸிற்கு வேலை சொன்னால் அதைச் செய்ய மாட்றீங்க என கனி சண்டை போடுகிறார்.

அப்போது தலையிட்ட கம்ருதீன், "உங்களுக்கு ரூல்ஸே தெரியல" என கனியிடம் பேசுகிறார்.

இந்த சண்டை பெரிய பிரச்சனையாக மாறியபோது, கடுப்பான கம்ருதீனும், வினோத்தும், "நீ என்ன செய்கிறாய் தெரியுமா? ஆதிரைக்கு கூஜா தூக்குகிறாய்" என்று எஃப்.ஜே-வைப் பார்த்துப் பேசுகிறார்கள்.

இதற்கு முன்னதாக, வி.ஜே. பார்வதியும் திவாகரும் ஆதிரை தயாரித்த ஜூஸை நிராகரித்தபோது மோதல் ஏற்பட்டிருந்தது.

அதே திவாகர், தற்போது வி.ஜே. பார்வதியைக் குறித்து, "பேசாம பாருவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்" என்று வியானாவிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.