“அடுத்த 33 வருஷத்துக்கு நான் இதைத்தான் செய்வேன்!” – மலேசியாவில் அரசியல் நோக்கத்தை ஒப்புக்கொண்ட விஜய்!
மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தனது எதிர்காலத் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
"எனக்காக 33 வருஷமா தியேட்டர் வாசல்ல நின்ன என் ரசிகனுக்காக… அடுத்த 30 வருஷத்துக்கு அவனுக்காக துணையா நிற்க நான் முடிவு செய்திருக்கிறேன்!"
இந்த ஒரு வரிதான் போதும் – விஜய் இனி நடிப்பதில்லை, அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறார் என்பதை உலகம் முழுவதும் உணர வைக்க!
மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தனது எதிர்காலத் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படம் அவரது கடைசி நடிப்பு என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த உண்மை. இப்போது, அவர் தனது ரசிகர்களுக்காக அடுத்த 30 ஆண்டுகளில் அரசியல் மூலம் தொடர்ந்து துணையாக இருப்பேன் என எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.
விழாவில் பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் நாசர். விஜயின் நடிப்பை இன்னும் தொடர வேண்டும் என உருக்கமாக கோரினார். “என் மகன் நடக்க வைத்தவர் விஜய். அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்” என்று பாசமாக கூறினார்.
இயக்குநர் அட்லி பேசும்போது, “விஜய் One Last Time என்ற மனநிலையில் தனது கடைசி படங்களை எல்லாம் செய்திருக்கிறார். ஜனநாயகனும் அந்த வரிசையில் இறுதியான படமாக இருக்கும்” எனத் தெளிவுபடுத்தினார். மேலும், விஜய் தன்னை உதவி இயக்குநரிலிருந்து முன்னேற்றியவர் என்றும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் பாராட்டினார்.
இயக்குநர் நெல்சன் விழாவில் பேசுகையில், "ஆடியோ லான்சுக்கு வந்திருக்கிறேன், ஆனால் இது அர்ஜென்டினா மேட்ச்சு மாதிரி இருக்கு!" என ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்து வியந்தார். மேலும், “இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், பீஸ்ட் படத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வேன்” எனத் தனது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
