பிக்பாஸ் தமிழ் 9: வி.ஜே. பார்வதியிடம் சொன்னது இதுதான்; "பெரிய ஸ்டாரே வந்தாலும் திவாகர் அப்படிதான் இருப்பாரு" – அப்சரா சி.ஜே ஓபன் டாக்
கேரளாவைச் சேர்ந்த அப்சரா சி.ஜே., மாடலிங் செய்து வருவதுடன், தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் (Bigg Boss Season 9), இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட திருநங்கை மாடல் அப்சரா சி.ஜே (Apsara C.J.) தற்போது நிகழ்ச்சி குறித்துப் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அப்சரா சி.ஜே., மாடலிங் செய்து வருவதுடன், தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், அப்சராவுக்குக் கிடைத்த வாய்ப்பு அவரது திறமையை ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.
ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அப்சரா சி.ஜே. கூறியதாவது: "முதல் வாரத்திலேயே எனக்கும் போட்டியாளர்களுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால், அந்தப் பிரச்சனைகளை நான் சபைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். நானே பேசி தீர்த்துவிட்டேன்" என்று அவர் கூறினார்.
வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் குறித்து அவர் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்: வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ரொம்ப பிரபலமானவர். அவர் உள்ளே வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், அவர் என்ன செய்வார் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அப்சரா தெரிவித்தார்.
திவாகரை 80 சதவிகிதம் தனக்கு பிடிக்கும் என்றும், அவர் செய்யும் செயலை வைத்து 20 சதவிகிதம் பிடிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், "பெரிய ஸ்டாரே கொண்டு வந்து நிறுத்தினாலும் நம்ம சமம் தான் என்று திவாகர் பேசுவார்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, திவாகர் வி.ஜே. பார்வதியிடம் திடீர் திருமணப் பிரபோசல் வைத்திருந்தார். வி.ஜே. பார்வதி விளையாட்டை ரொம்ப தனிப்பட்ட முறையில் (personal) எடுத்து விளையாடுவதாகவும், நெகட்டிவ்வாகவும் நிறைய செய்கிறார் என்றும் அப்சரா சி.ஜே. கூறினார்.
இருப்பினும், "பார்வதி உண்மையாக இருக்கிறார். பார்வதி பார்வதியாக இருக்கிறார்" என்று கூறிய அப்சரா, இதைத் தான் பார்வதியிடமே நேரடியாகச் சொன்னதாகக் குறிப்பிட்டார். (பார்வதி சமீபத்தில் கனி மற்றும் ஆதிரையுடன் மோதலில் ஈடுபட்டிருந்தார்.
