பிப்ரவரி 2026: வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – வெளியான அறிவிப்பு - லிஸ்ட் இதோ!

ஏடிஎம் சேவைகள், இணைய வழி வங்கி சேவைகள் மற்றும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 2026: வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – வெளியான அறிவிப்பு - லிஸ்ட் இதோ!

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை Reserve Bank of India (RBI) வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் வார விடுமுறைகள், அரசு விடுமுறைகள் மற்றும் பண்டிகை நாட்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் பெரிய அரசு விடுமுறைகள் அல்லது பண்டிகைகள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான நாட்களில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். இருப்பினும், மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளின் காரணமாக ஐந்து நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

குறிப்பாக பிப்ரவரி 15, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதுடன், மகா சிவராத்திரி திருநாளும் வரும் காரணத்தால், ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் வங்கி கிளைகள் செயல்படாததால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணப்பரிவர்த்தனை மற்றும் வங்கி சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏடிஎம் சேவைகள், இணைய வழி வங்கி சேவைகள் மற்றும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.