இலக்கியாவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. ஸ்டண்ட் மாஸ்டர் விளக்கம்!
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான் என பதிவிட்டு இருந்தார்.

டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான் என பதிவிட்டு இருந்தார்.
தொடர்ந்து, டிக் டாக் இலக்கியா அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், போரூர் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கீழ் பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னணி ஸ்டண்ட் மாஸ்டரான சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன் தான் காரணம் என செய்திகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை யாரோ செய்கிறார்கள்.
இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சந்திப்பேன். வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் துயரத்தில் இருந்தே, நான் இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். இலக்கியா தற்கொலை முடிவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன். அரிமா நம்பி, புலி, நானும் ரௌடி தான்,தெறி, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஜில்லா, கோட், தீரன் அதிகாரம் ஒன்னு, வடசென்னை உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.