2026 டி20 உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தானும் விலகுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் நடைபெறவுள்ள T20 World Cup தொடரைச் சுற்றி சர்ச்சைகள் ஓய்வதற்குள், இன்னொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

2026 டி20 உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தானும் விலகுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் நடைபெறவுள்ள T20 World Cup தொடரைச் சுற்றி சர்ச்சைகள் ஓய்வதற்குள், இன்னொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தியா வர மறுத்த Bangladesh cricket team ஏற்கனவே தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர்களுக்கு பதிலாக Scotland cricket team சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இன்னும் சர்ச்சையாக நீடிக்கும் சூழலில், தற்போது பாகிஸ்தான் தரப்பில் இருந்து புதிய வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் Mohsin Naqvi செய்தியாளர்களிடம் பேசும்போது, “2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதா இல்லையா என்பதை பாகிஸ்தான் அரசே முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் நாடு திரும்பிய பின்பு அரசின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் நக்வி கூறியுள்ளார்.

“ஒருவேளை அரசு அனுமதி மறுத்தால், எங்கள் இடத்தில் வேறு அணியை சேர்த்துக்கொள்ள International Cricket Council-க்கு வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறியிருப்பது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் உள்விவகாரத் துறை அமைச்சராகவும் மோஷின் நக்வி இருப்பதால், அவரது இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் அவர், “எங்களிடம் திட்டம் A, B, C என மாற்று ஏற்பாடுகள் தயாராக உள்ளன. நேரம் வரும்போது அதனை செயல்படுத்துவோம். சாம்பியன்ஸ் டிராபி விவகாரத்திலும் இதுபோன்ற அழுத்தமான சூழல்களை நாம் ஏற்கனவே கையாள்ந்துள்ளோம். அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறி, ஐசிசிக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

வங்கதேச அணி நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நக்வி, “வங்கதேசம் உலக கிரிக்கெட்டின் முக்கிய அங்கம். அவர்களை இந்த விவகாரத்தில் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் போட்டிகளுக்காக மைதானங்களை மாற்றும் ஐசிசி, வங்கதேசத்திற்கு மட்டும் ஏன் மாற்றம் செய்ய மறுக்கிறது? ஒரு குறிப்பிட்ட நாடு மட்டுமே ஐசிசியை இயக்குவது போல உள்ளது” என்று இந்தியாவை நேரடியாக பெயர் குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே வங்கதேசம் வெளியேறியதாக கூறப்படும் நிலையில், தற்போது பாகிஸ்தானின் பங்கேற்பும் கேள்விக்குறியாகி இருப்பது, 2026 டி20 உலகக்கோப்பைக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இது தொடரின் வர்த்தக மதிப்பையும் வருவாயையும் பாதிக்குமா? அல்லது பங்கேற்காத அணிகளுக்கே அதிக இழப்பாக மாறுமா? என்ற கேள்விகள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன.