நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்: புதிய சாதனையுடன் முதலிடத்தில் விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் Virat Kohli அசத்தலான சதம் விளாசி புதிய சாதனை ஒன்றை படைத்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்: புதிய சாதனையுடன் முதலிடத்தில் விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் Virat Kohli அசத்தலான சதம் விளாசி புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்த போட்டியில் கோலி தனது 54-வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது மொத்த சதங்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு Daryl Mitchell மற்றும் Glenn Phillips உறுதுணையாக நின்றனர். இருவரும் சதம் அடித்து அசத்த, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

338 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. Rohit Sharma, Shubman Gill, Shreyas Iyer ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் விளையாடிய கோலி 91 பந்துகளில் சதம் பூர்த்தி செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த சதத்தின் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். அவரை தொடர்ந்து Ricky Ponting மற்றும் Virender Sehwag ஆகியோர் தலா 6 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இவர்களுக்குப் பிறகு Sachin Tendulkar மற்றும் Sanath Jayasuriya தலா 5 சதங்கள் அடித்து பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.