திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ராக்கெட்டின் பாகம் – கடற்படை கண்காணிப்பு
திருகோணமலை மாவட்டம், சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய நாட்டுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ராக்கெட்டின் ஒரு பாகம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
திருகோணமலை மாவட்டம், சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய நாட்டுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ராக்கெட்டின் ஒரு பாகம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
டிசம்பர் 28 மாலையளவில், குறித்த பகுதியில் மிதந்து வந்த அந்த ராக்கெட் கூறானது கரையில் முட்டியது. சம்பூர் பொலிஸ் பிரிவு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளது.
ராக்கெட் பாகம் விண்வெளிக்கு ஏவப்படும் போது கழன்று விழும் கழிவுப் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ISRO-வின் ஏவுதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் இரண்டு இலங்கைக் கடற்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பொதுமக்கள் நெருங்குவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.