கலிபோர்னியா பனிச்சரிவு: உயிருக்குப் போராடும் 9 வீரர்கள் - மீட்புப் பணியில் முட்டுக்கட்டை போடும் பனிப்புயல்

வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் (Castle Peak) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிச்சரிவில் சிக்கிய 6 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தப் பயணக்குழுவில் இருந்த மேலும் 9 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

'பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ்' (Blackbird Mountain Guides) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் பனிச்சறுக்குப் பயணத்தின் இறுதி நாளில், செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து நேர்ந்தது. அப்பகுதியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் சூறாவளி காற்று மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. 

மீட்கப்பட்ட 6 பேரில் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேட சுமார் 46 மீட்புப் படையினர் பனிச்சறுக்கு கருவிகள் மற்றும் சிறப்பு வாகனங்கள் மூலம் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google