இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மீண்டும் சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான மறைந்த சபேஷின் மகனும், திரைப்பட நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார்.

கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷும், கடந்த சனிக்கிழமை இசையமைப்பாளர் தேவாவும் மறைந்த நிலையில், தற்போது ஒரே குடும்பத்தில் மீண்டும் நடிகர் கார்த்திக் சபேஷ் உயிரிழந்துள்ளார். இவர் 'உதயம் NH4', 'பர்மா', 'பட்டத்து யானை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் உயிரிழப்புகள் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன, மேலும் தேவாவின் குடும்பத்தினருக்கு பல திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.