மொரட்டுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிலியந்தலை சுவரபொல பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. மொரட்டுவை விடுதி உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக வந்த நபர்களாலேயே இச்சம்பவமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் காரில் தப்பிச் செல்ல முற்பட்டபோது, வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிலியந்தலை சுவரபொல பகுதியில் கார் பழுதடைந்துள்ளது.
இதனையடுத்து, காரில் இருந்து இறங்கிய நபர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

