டி20 தொடரின் முதல் போட்டி: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடுவர்களால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள England cricket team, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்று வருகிறது. அந்த தொடரின் முதல் டி20 போட்டி பல்லேகலேயில் உள்ள Pallekele International Cricket Stadium மைதானத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடுவர்களால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த Sri Lanka cricket team, நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் Kusal Mendis 37 ஓட்டங்களையும், Pathum Nissanka 23 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து 134 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து Duckworth–Lewis method முறைப்படி வெற்றி நிர்ணயிக்கப்பட்டதில், இங்கிலாந்து அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணிக்காக Phil Salt 46 ஓட்டங்களையும், Tom Banton 29 ஓட்டங்களையும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
