இந்த வருடம் மக்களால் அதிகமாக கூகுளில் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? ஷாக் ஆகாதிங்க!
எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ஆகவும் களமிறங்கி வெற்றியை பெற்று தந்தார். இதனால் அவர் குறித்தும் மக்கள் அதிகமாக தேடி இருக்கிறார்கள்.
 
                                நடப்பாண்டில் கூகுளில் தேடப்பட்ட பிரபலங்கள் யார் என்பது தொடர்பில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, இந்திய ரசிகர்கள் வழக்கம்போல் கிரிக்கெட் சார்ந்த நபர்களையே அதிகம் தேடி இருக்கின்றமை தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஆறு கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். முதல் இடத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி உள்ளதுடன், கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் முதலிடம் பிடித்திருப்பவர் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் தான்.
ஏனென்றால் கிரிக்கெட்டில் தற்போது அதிக ரசிகர்கள் கொண்டவர்கள் என்றால் அது விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி மட்டும்தான்.ஆனால் இந்த மூன்று வீரர்களுமே இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
சுப்மன் கில் அதிக மக்களால் தேடப்படும் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். இந்திய ரசிகர்கள் இவர் குறித்து அதிகமாக கூகுளில் தேடி இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா.
 
உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் மேல் அடித்து ரச்சின் ரவீந்தரா பட்டையைக் கிளப்பியதால் அவர் குறித்து இந்திய ரசிகர்கள் அதிகமாக தேடியிருக்கிறார்கள். 
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி. தனி ஆளாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்ததால் சமி குறித்து ரசிகர்கள் கூகுளில் அதிக அளவில் தேடியிருக்கிறார்கள். 
நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல், இவர் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். இதனால் அவர் குறித்து ரசிகர்கள் அதிகம் கூகுளில் தேடியிருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள சூரியகுமார் யாதவ் நடப்பு உலக கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை எனினும் இறுதிப் போட்டியில் அவர் மிகவும் மெதுவாக விளையாடி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ஆகவும் களமிறங்கி வெற்றியை பெற்று தந்தார். இதனால் அவர் குறித்தும் மக்கள் அதிகமாக தேடி இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தைப் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளார். உலகக்கோப்பை ஃபைனலில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் அவர் குறித்தும் இந்திய ரசிகர்கள் அதிகமாக தேடிருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்கம் குறித்தும் இந்திய ரசிகர்கள் தேடி இருக்கிறார்கள்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






