பிரித்தானிய குடியுரிமைக்கு காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க தற்போது 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த புதிய யோசனை, அகதிகளின் கோரிக்கையை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

புதிய திட்டத்தின் படி, அகதிகள் தற்காலிகமாக மட்டுமே பிரித்தானியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் நிலையை தொடர்ந்து பரிசீலித்து, அவர்களது சொந்த நாடு பாதுகாப்பானதாக கருதப்பட்டால் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இப்பொழுது அகதி நிலை 5 ஆண்டுகள் வரை இருக்கும். இதற்குப் பிறகு நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், புதிய திட்டம் இதை 2.5 ஆண்டுகளுக்கு குறைத்து, தொடர்ந்து நிலையை பரிசீலிக்கும் முறையில் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தர குடியிருப்பை பெறுவதற்கான காலம் இப்போது 5 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.