தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை தொடங்கியுள்ளது.
ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
அத்துடன், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது.
இதேவேளை, புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையிலும் போர் சூழலில் பாதுகாப்பு ஒத்திவை நடைபெற்று வருகிறது.