உலகில் மிகவும் வயதான பெண்மணி 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார்.

May 2, 2025 - 07:46
உலகில் மிகவும் வயதான பெண்மணி 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார்.

தெற்கு பிரேசிலிய மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் 1908 ஜூன் 8 ஆம் திகதிபிறந்த இனா கனபரோ லூகாஸ், தனது 20 களின் முற்பகுதியில் கன்னியாஸ்திரியானார்.

கால்பந்து ரசிகையான அவர், தனது 116வது பிறந்தநாளை தனக்குப் பிடித்த அணியின் சின்னத்தை அணிந்து கொண்டாடி இருக்கின்றார்.

2018 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸால் ஆசீர்வதிக்கப்பட்ட இனாவின் மறைவை அடுத்து, தற்போது வாழும் வயதானவர் என்ற பட்டம் இங்கிலாந்தின் சர்ரேயைச் சேர்ந்த 115 வயதான எத்தேல் கேட்டர்ஹாம் என்பவருக்கு செல்கிறது.

116 வயதான சகோதரி இனாவுக்கு எந்த நோயும் இல்லை, ஆனால் அவரது உடல் படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!