செவ்வாய் பெயர்ச்சி: அடுத்த 40 நாட்களில் இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்வில் கொடி கட்டப் போகிறார்கள்!

செவ்வாய் பெயர்ச்சி: இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் அசாதாரணமான வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய் பெயர்ச்சி: அடுத்த 40 நாட்களில் இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்வில் கொடி கட்டப் போகிறார்கள்!

செவ்வாய் பகவான் டிசம்பர் 7, 2025 அன்று தனுசு ராசிக்குள் பிரவேசித்துள்ளார். குருவின் சொந்த ராசியான தனுசில் செவ்வாய் நுழைவது ஜோதிட ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் அசாதாரணமான வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேஷம்:

வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்த்தும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

சிம்மம்:

குடும்ப உறவுகள் மேம்படும்; குழந்தைகளுடனான பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் பிற துறைகளில் முன்னேற்றம் காண்பார்கள். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் துறையிலும் புதிய வாசல்கள் திறக்கப்போகின்றன.

துலாம்:

உடன் பிறந்தவர்கள் மற்றும் சகோதரர்கள் வழியாக ஆதரவும், உதவியும் கிடைக்கும். சொத்து சேர்க்கும் வாய்ப்புகள் தெரிய வரும். சமூக மரியாதை அதிகரிக்கும். தொழிலில் தைரியமாக முதலீடு செய்தால் அது லாபகரமாக அமையும்.

கும்பம்:

பெற்றோர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்; நிதி ரீதியான நன்மைகள் பல கிடைக்கும். தொழிலில் லாபம் உறுதி. தாமதமாகி வந்த சம்பள உயர்வு அல்லது போனஸ் கிடைக்கலாம்.

மீனம்:

பதவி உயர்வு, விருதுகள், நல்ல வருமானம், சொத்து மற்றும் லாப வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்காகக் காத்திருக்஫்ப்பன. தந்தை வழியிலான உறவுகள் மேம்படும். அரசியல், அரசுத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கும்.

இந்த அருளான நேரத்தில் கவனம், முயற்சி மற்றும் நேர்மையை இணைத்து செயல்பட்டால், இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.