சூரிய பெயர்ச்சியால் உருவாகும் மகாதன ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

சூரிய பெயர்ச்சியின் காரணமாக மகாதன ராஜயோகமும் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகுந்த அதிர்ஷ்டத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் மகாதன ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களுக்கும் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாத காலம் பயணிப்பதால், முழு ராசிச் சுழற்சியை முடிக்க ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சூரியனின் நிலை மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு முறையும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும்.

சூரியன் ராசி மாற்றம் செய்யும் போதெல்லாம் தமிழ் மாதங்களும் பிறக்கின்றன. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் 16 அன்று சூரியன் தனுசு ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். குரு பகவான் அதிபதியாக இருக்கும் இந்த தனுசு ராசிக்குள் சூரியன் சுமார் ஒரு ஆண்டு கழித்து நுழைவதால், இந்த பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், ஏற்கனவே செவ்வாய் இந்த ராசியில் பயணித்து வருவதால், மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.

இதனுடன் சேர்ந்து, சூரிய பெயர்ச்சியின் காரணமாக மகாதன ராஜயோகமும் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகுந்த அதிர்ஷ்டத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும். டிசம்பர் மாத சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இந்த மகாதன ராஜயோகத்தின் மூலம் சிறப்பான பலன்களை பெறவுள்ள ராசிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மகாதன ராஜயோகம் குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதோடு, நீண்ட நாட்களாக இருந்த பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் வரக்கூடிய சூழ்நிலை உருவாகும். கல்வி மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். தடைபட்டு இருந்த பணிகள் மீண்டும் வேகம் பெற்று வெற்றிகரமாக நிறைவேறும். பணியிடத்தில் மதிப்பும் பொறுப்பும் அதிகரிக்கும். உடல்நலமும் முன்பை விட மேம்படும்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த யோகம் அதிர்ஷ்டத்தின் கதவுகளைத் திறக்கவுள்ளது. சூரியன் 9-ஆம் வீட்டிற்கு செல்லுவதால், முயற்சிகள் அனைத்திலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் மன மகிழ்ச்சியைத் தரும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட்டால் வருமானம் உயர்வதுடன் சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல்நல ரீதியாகவும் நல்ல மாற்றங்கள் காணப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு மகாதன ராஜயோகம் வருமான வளர்ச்சியை ஏற்படுத்தும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் நிலையான லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாகும். குடும்ப வாழ்க்கையில் குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்து, சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள்.