மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜுக்கு ஓய்வு... அறிமுகமாகும் புதிய வீரர்.. யார் தெரியுமா?

முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜுக்கு ஓய்வு... அறிமுகமாகும் புதிய வீரர்.. யார் தெரியுமா?

இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இலண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.

இதனையடுத்து, இந்தப் போட்டியில் இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு பெற்றது ஏன்.. விராட் கோலி சொன்ன காரணம் இதுதான்!

முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக முகமது சிராஜ்  விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

இலண்டன் லார்ட்ஸ் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனாலும், இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானத்தில் கூடுதல் சாதகம் இருக்கும் என்பதனாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக  கூறப்படுகின்றது.

ஏற்கெனவே இந்திய டி20 அணியில் நட்சத்திர பந்துவீச்சளராக இருக்கும் அவர் நீண்ட காலமாகவே டெஸ்ட் வாய்ப்புக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.