அடங்காத ஆசை.. இம்முறை பிரியாணி.. கொஞ்சம் கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டுங்க பாஸ்!

பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் இந்திய உணவுகளை ருசி பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அடங்காத ஆசை.. இம்முறை பிரியாணி.. கொஞ்சம் கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டுங்க பாஸ்!

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு முதல்முறையாக பாகிஸ்தான் வீரர்கள் வந்துள்ளனர். ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா என்று வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகின்றனர். 

இதுவரை பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 தோல்வி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பு மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்த முடிவு செய்யப்படும்.

ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் இந்திய உணவுகளை ருசி பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

ஐதராபாத்தில் களமிறங்கிய முதல் நாளிலேயே ஹோட்டலில் பிரியாணி, கபாப் உள்ளிட்ட உணவுகளை ருசி பார்த்தனர். அதுமட்டுமல்லாமல் பயிற்சி முடிவடைந்த பின் இரவு உணவிற்கு ஹோட்டலில் இருந்து வெளியில் சென்று சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டனர். 

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.. இப்படி செய்யலாமா.. கொந்தளித்த அப்ரிடி!

ஐதராபாத்தில் இருந்து புறப்படும் போது கூட ஸ்பெஷல் உணவுகளை பார்சல் வாங்கியது பேசுபொருளானது. இதனால் பிரியாணியை சுவைத்து உண்டு வரும் பாகிஸ்தான் வீரர்கள் மீது முன்னாள் வீரர்கள் காட்டமாக விமர்சித்தனர். 

உலகக்கோப்பை வெல்வதை விடுத்து இந்திய உணவுகளை ருசி பார்க்கவே பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா சென்றுள்ளதாக முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக அக்.28ஆம் தேதி பாகிஸ்தான் வீரர் கொல்கத்தாவில் தரையிறங்கியுள்ளனர்.

கொல்கத்தா வந்த பின் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் உடனடியாக இனிப்புகளை ருசி பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் உணவுகளை தவிர்த்துவிட்டு, ஆன்லைன் செயலி மூலமாக ஜாம் ஜாம் உணவகத்தில் கொல்கத்தா பிரியாணி, கபாப் மற்றும் சாப்ஸ் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து இந்திய உணவுகளை ருசி பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் கிரிக்கெட்டிலும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp