கஜினி சூர்யாவை விட மோசம்.. ரோகித் சர்மாவை வதைக்கும் கெட்ட பழக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. என்னதான் திறமைகள் இருந்தாலும் சிலருக்கு சில மைனஸ் பாயிண்டுகள் நிச்சயம் இருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. என்னதான் திறமைகள் இருந்தாலும் சிலருக்கு சில மைனஸ் பாயிண்டுகள் நிச்சயம் இருக்கும்.
எப்படி நண்பன் படத்தில் வரும் டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை, டாபிக் மாறினால் அவனும் ஜீரோ என்ற பாடல் வரி வருகிறதோ அதற்கு ஏற்றார் போல் ரோகித் சர்மாவும் நிஜ வாழ்க்கையில் இருக்கிறார்.
கிரிக்கெட் களத்தில் சிங்கம் போல் இருக்கும் ரோகித் சர்மாவுக்கு இயற்கையாகவே ஒரு பிரச்சனை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு ஞாபக மறதி அதிகம் இருக்கிறதாம்.
நடந்ததை மறக்கும் பழக்கம் இல்லை என்றாலும் தான் வைத்த பொருட்களை எங்கே வைத்தோம் அல்லது எடுத்துக் கொண்டோமா என்பதை ரோகித் சர்மா மறந்து விடுவாராம்.
இப்படி பலமுறை ரோகித் சர்மா பல முக்கியமான பொருட்களை மறந்து வைத்துவிட்டு இருந்திருக்கிறாராம். இது குறித்து இந்திய அணி வீரர்கள் பலரும் ரோகித் சர்மாவை கிண்டல் செய்து இருக்கிறார்கள்.
குறிப்பாக விராட் கோலி வெளிப்படையாகவே ரோகித் சர்மாவை விமர்சித்து இருக்கிறார். தனது வாழ்க்கையில் ரோகித் சர்மாவை போல் பொருட்களை மறந்து வைத்துவிட்டு பிறகு தேடும் நபரை நான் பார்த்ததே இல்லை என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
ரோகித் சர்மா தன்னுடைய பாஸ்போர்ட், ஐ போன், ஐ பேட் உள்ளிட்ட பல பொருட்களை மறந்து வைத்துவிட்டு பின்னர் தேடுவாராம். சில பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை புதியதாக ஒன்று வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பாராம்.
இதனால் இந்திய அணி எங்கேயும் புறப்படும் போது ரோகித் சர்மாவிடம் அனைத்தையும் எடுத்துக் கொண்டீர்களா என்று கேட்கும் பழக்கம் இருக்கிறதாம்.
இதேபோன்று ரகானே,ரோஹித் சர்மா குறித்து சொன்ன விஷயம் தான் மிகவும் அதிர்ச்சிகரமானது. திருமணத்தின் போது ரோகித் சர்மாவுக்கு அவரது மனைவி அணிவித்த மோதிரத்தை ஒரு முறை ரோகித் சர்மா ஹோட்டலில் மறந்து வைத்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்துவிட்டாராம்.
அதன் பிறகு அதிர்ச்சியில் உறைந்து போன ரோகித் சர்மா அணியின் மேலாளரிடம் கூறி ஹோட்டலில் இருக்கும் மோதிரத்தை எடுத்து வர சொன்னாராம்.
விமான நிலையத்தில் காத்திருந்த போது மோதிரம் தனது கைக்கு திரும்பிய பிறகு தான் ரோகித் சர்மா இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்.
இதேபோன்று தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா குறித்து தன்னுடைய அனுபவத்தை தெரிவித்திருக்கிறார்.ஒருமுறை டெல்லியில் இருந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்ற போது ரோகித் சர்மா தன்னுடைய பாஸ்போர்ட்டை வீட்டிலே வைத்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்.
அதன் பிறகு தான் தான் பாஸ்போர்ட் எடுத்து வரவில்லை என தெரிந்து வீட்டிலிருந்து ஒரு நபரை அழைத்து பாஸ்போர்ட்டை வந்து கொடுத்திருக்க சொல்லிருக்கிறார்.
அந்த நேரத்தில் மட்டும் பாஸ்போர்ட் வரவில்லை என்றால் ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலே கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இருக்குமாம்.
இது குறித்து ரோகித் சர்மாவே தமக்கு இந்த பிரச்சனை இருப்பதாகவும் காலையில் எப்போதும் தாமதமாக எழுந்திருப்பதால் அவசரத்தில் இது போன்ற பொருட்களை மறந்து வைத்து விடுவதாகவும் சமாளித்திருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |