அதிரடி காட்டிய இங்கிலாந்து அணி.. அஸ்வினால் நொடியில் மாறிய ஆட்டம்.. எதிர்பாராத ட்விஸ்ட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. 

அதிரடி காட்டிய இங்கிலாந்து அணி.. அஸ்வினால் நொடியில் மாறிய ஆட்டம்.. எதிர்பாராத ட்விஸ்ட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் கிரேலி - பென் டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. 

முதல் ஓவரை பும்ரா வீச அந்த ஓவரில் 1 ரன் சேர்க்கப்பட்ட நிலையில், சிராஜ் வீசிய 2ஆவது ஓவர் முதல் இங்கிலாந்து அணி ஆட்டத்தை அதிரடியாக தொடங்கியது. 

அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி கிராலி அசத்த, பும்ரா வீசிய அடுத்த ஓவரில் டக்கெட் 2 பவுண்டரிகளை விளாசினார்.

8 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் சேர்த்திருக்க, கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக பும்ரா மற்றும் சிராஜ் இருவரையும் வெளியேற்றினர். 

இதையடுத்து அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் வந்தனர். ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்ததும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் கூடுதல் கவனத்துடன் ஆட துவங்கினர்.

11 ஓவர்களில் தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை 50 ரன்களுக்கு மேல் கொண்டு சென்ற  நிலையில் அஸ்வின் வீசிய ஓவரில் அதிரடியாக ஆடிய வந்த பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதுவரை அஸ்வினுக்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பென் டக்கெட், 48 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 முறையும் விக்கெட்டையும் பறிகொடுத்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...