சந்திரமுகி நான் நடிக்க வேண்டிய படம்… திடீரென ஷாக் கொடுத்த நடிகை!

சந்திரமுகி படம் நான் நடிக்க வேண்டிய படம் என கூறி பிரபல நடிகை  புன்னகை அரசி சினேகா ஷாக் கொடுத்துள்ளார். 

Jan 15, 2024 - 12:28
சந்திரமுகி நான் நடிக்க வேண்டிய படம்… திடீரென ஷாக் கொடுத்த நடிகை!

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்றது.

சந்திரமுகி படம் என்றாலே ரஜினியை தாண்டி அனைவரின் நினைவிற்கும் வருவது ஜோதிகா தான். ஏனெனில் அந்த படத்தில் அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 

இந்நிலையில் சந்திரமுகி படம் நான் நடிக்க வேண்டிய படம் என கூறி பிரபல நடிகை  புன்னகை அரசி சினேகா ஷாக் கொடுத்துள்ளார். 

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நீங்கள் மிஸ் செய்த படம் எது என்று சினேகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் சந்திரமுகி என கூறி ஷாக் கொடுத்தார். 
இத்தனை ஆண்டுகளில் இந்த செய்தி யாருக்கும் தெரியாது. சந்திரமுகியில் ஜோதிகா கேரக்டரில் நடிக்க முன்னதாக சினேகாவை தான் அணுகினார்களாம்.

ஆனால் அந்த சமயத்தில் அவரால் நடிக்க முடியாமல் போகவே ஜோதிகா நடித்து அசத்தியுள்ளார். இருப்பினும் தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை எனவும் சினேகா கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!